"இனிவரும் தேர்தல்களில் 'நோட்டா' தான்"முன்னாள் தேர்தல் ஆணையரின் சர்ச்சை பேச்சு!

"இனிவரும் தேர்தல்களில் 'நோட்டா' தான்"முன்னாள் தேர்தல் ஆணையரின் சர்ச்சை பேச்சு!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அடுத்து வரும் (2023) தேர்தலில் அதிக அளவில் வாக்காளர்கள் நோட்டாவை பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

அதாவது வரவிருக்கும் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் சரியில்லை என்று வாக்காளர்கள் கருதும் நிலையில் நோட்டாவுக்கு அதிகம் பேர் வாக்களிக்க வாய்ப்புள்ளது. தேரதல் நடைமுறைகளும், வேட்பாளர்களும் வாக்காளர்ளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை நடந்த தேர்தல்களில் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், இனி வரும் தேர்தல்களில் வாக்களார்கள் இதை கருத்தில் கொண்டு நோட்டாவுக்கு வாக்களிக்கலாம்.

முன்பைவிட அதிக அளவில் மக்கள் தேர்தலில் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், நல்ல வேட்பாளர்களை அவர்களால் காண முடியவில்லை. எனவே தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு பதில் அவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம். இதுபற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்றார் நஸீம் ஜைதி.

2018 ஆம் ஆண்டு கர்நாடக தேர்தலில் வெற்றிபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் குற்றப்பின்னணி, தேர்தலுக்கு செலவிடப்பட்ட நிதி, கல்வி, பாலினம் இவை குறித்து கருத்தரங்கில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் 2023 தேர்தலில் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் கையாண்ட புதிய உத்திகள், வாக்காளர்களின் அக்கறையின்மை, நேர்மையான வெளிப்படையான வாக்குப்பதிவு, மற்றும் தேர்தல் பிரசாரத்தின்போது கைப்பற்றப்பட்ட பணம், மதுபானங்கள் மற்றும் அது தொடர்பாக அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

நோட்டா - NOTA - ஆங்கில சொல்லின் விரிவாக்கம் None of The Above என்பதாகும். ‘நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்பது இதன் பொருள்.

2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் "நோட்டா" பொத்தானை வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2013ம் ஆண்டு நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், முதல் முறையாக நோட்டா பயன்படுத்தப்பட்டது. ஒரு சதவீதத்திற்கு அதிகமாக வாக்காளர்கள் இதை தேர்வு செய்திருந்தனர்.

இதுவரை, மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகளில் நோட்டா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com