நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா: தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவும் ஆதரவும் எதிர்ப்பும்!

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா: தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவும் ஆதரவும் எதிர்ப்பும்!

நாளை மறுநாள் புதுடில்லியில் நடைபெறும் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளப்போவதாக பா.ம.க கலந்து கொள்ளும் என்று அன்புமணி அறிவித்துள்ளார். விழாவை புறக்கணிப்பதோடு கருப்புக் கோடி ஏந்தி போராட்டத்திலும் இறங்கவிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனம் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்திருக்கின்றன. வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சை அரசியல் காரணமாக எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கக்கூடாது என்பதை நிதியமைச்சர் முதல் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர்கள் வரை பலரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் சரியாக இருக்கும் இதில் தி.மு.க உறுதியாக இருப்பதாகவும், நாட்டின் உயர் பதவியில் இருப்பவரால் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்படுவதுதான் ஏற்புடையதாக இருக்கும் என்கிற நிலைப்பாட்டில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக தி.மு.கவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய டிவிட்டர் செய்தியில் உறுதிப்படுத்தியிருக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க கலந்து கொள்ள இருப்பதாகவும் விளக்கமளித்திருக்கிறார்.

இந்நிலையில் மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித்தலைவர் திருமாவளவன், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளன. அதில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் கொண்டவர். அவரை கொச்சைப்படுத்துவம் வகையில் குடியரசுத் தலைவரை அழைக்காமல் திறப்பு விழாவை நடத்துகிறார்கள் என்று பேசிய திருமாவளவன் இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க அழைக்காத மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே 28-ந்தேதி துக்க நாளாக கடைபிடிப்பது என முடிவெடுத்திருபபதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு கொடியேற்றி கண்டனத்தை பதிவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com