முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம்!

முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம்!

கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறவுள்ள தென்மண்டலக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலையில் கேரளா புறப்பட்டுச் சென்றார்.

-இதுகுறித்து முதல்வர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;

இந்திய மாநில மறுசீரமைப்புச் சட்டம், ஆண்டு 1956-இன் படி, இந்திய மாநிலங்களை ஆறு மண்டலக் குழுக்களாக பிரிக்கப்பட்டது. அதன்படி தென்மண்டலக் குழுவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும்  நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

இந்த  மாநிலங்களிடையே உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்வு காணும் வகையில் அவ்வப்போது கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன்படி நாளை (செப்டம்பர் 3) திருவனந்தபுரத்தில் தென்மண்டலக் குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில்,தென் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அந்த வகையில் இந்த தென்மண்டலக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலை இண்டிகோ விமானம் மூலம் கேரளா செல்கிறார்.

பின்னர் இன்று கேரளா முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து  முல்லைப்பெரியாறு, சிறுவாணி, நெய்யாறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளார். ​இதையடுத்து நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறும் தென்மண்டலக் குழு கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.பின்னர் நாளை இரவு சென்னை திரும்புகிறார்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com