இனி கேரளா அல்ல கேரளம் : சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்!

பினராய் விஜயன்
பினராய் விஜயன்

கேரள மாநிலத்தினுடைய பெயரை கேரளம் என்று மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது தொடர்பான மசோதாவை கேரள சட்டமன்றத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார்.

கேரளம் என்ற பூர்வீக பெயரை ஆங்கிலேயேர்கள் தங்களுக்கு ஏற்றார்போர் கேரளா என மாற்றிக்கொண்டனர். இதனையடுத்து தங்கள் மாநிலத்தின் பூர்வீக பெயரை மீட்டெடுக்கும் முயற்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கான மசோதாவை கேரள சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். அந்த மசோதாவில் ஒன்றிய அரசு அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் கேரளம் என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.

கேரளா பண்பாடு, கலாச்சாரம், இயற்கை வளம், சுற்றுலா மற்றும் ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனி சிறப்பு கொண்ட மாநிலமாக விளங்குகிறது. இந்தியாவினுடைய மிக முக்கிய மாநிலங்களில் ஒன்றாகவும், அதிக வருவாய் ஈட்டக் கூடிய மாநிலமாக உள்ள கேரளத்தை இனி கேரளம் என்று அழைக்க வேண்டும் என்று அந்த மாநில அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.

இந்த நிலையில் மாநிலத்தின் பெயர் மாற்றம் செய்வது தொடர்பான மசோதாவை முதலமைச்சர் பினராய் விஜயன் தற்போது முன்வைத்துள்ளார். மசோதாவின் மீது இன்று விவாதம் நடத்தப்படும் என்றும் விவாதத்திற்கு பின்னர் மசோதா நிறைவேற்றப்படும் என்றும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com