தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார் குஷ்பூ! அண்ணாமலை ட்விட்டரில் வாழ்த்து!

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார் குஷ்பூ! அண்ணாமலை ட்விட்டரில் வாழ்த்து!

குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார். குஷ்புவுக்கு அண்ணாமலை ட்விட்டரில் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

குஷ்பூ தமிழகத் திரைப் பட நடிகை மற்றும் அரசியல்வாதி. இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். 2010 இல் தி.மு.க. கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தார். அதன் பிறகு 2014 இல் தி.மு.க. விலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் 26 நவம்பர் 2014 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 12 அக்டோபர், 2020இல் குஷ்பு காங்கிரஸிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தார் .

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், திரைப் பட நடிகையுமான குஷ்பூ தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து பெண்களின் உரிமைக்காக போராடுவேன் என குஷ்புவும் தெரிவித்துள்ளார். இது குறித்து குஷ்பு கூறுகையில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப் பட்டதற்கு மகிழ்ச்சி. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, பெண்களுக்கான சுயமரியாதையின்மை ஆகியவற்றை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன் என்கிறார் குஷ்பூ.

அதில்,"பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டதற்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் உரிமைக்காக அவரின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் இது." இவ்வாறு என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com