மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

லெட்டர் பாலிடிக்ஸ் - இதுவொரு தொடர்கதை!

அ.தி.முகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியை குறிப்பிட்டு மத்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பினால், மாநில தேர்தல் ஆணையமோ ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு இன்னொரு கடிதத்தை இபிஎஸ், ஓபிஎஸ்க்கு அனுப்புகிறது. எந்தக் கடிதத்தை ஏற்றுக் கொண்டாலும் சட்ட ரீதியாக பிரச்னை ஏற்படும் என்பதால் இபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பும் கடிதங்களை கவனமாகக் கையாளுகிறது. லெட்டர் பாலிடிக்ஸ்!

ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் பற்றி அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் 16-ந் தேதி நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பினார்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்ற பெயரில் லாயிட்ஸ் ரோடு அலுவலகத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்தது. ஒ. பன்னீர் செல்வத்தையும் தேர்தல் ஆணையம் அங்கீரித்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் இறங்கினார்கள்.

அதிர்ந்து போன எடப்பாடி தரப்பு, அ.தி.மு.க.வில் அப்படி ஒரு பதவியே இல்லை எனக்கூறி அந்த கடிதத்தை தலைமைக்கழக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்துக்கு திருப்பி அனுப்பி விட்டனர். சபாஷ், சரியான முடிவு என்று எடப்பாடி ஆதரவாளர்கள் சந்தோஷப்பட்டார்கள்.

அனுப்பிய கடிதத்தை பெற்றுக்கொள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுப்பு தெரிவித்திருப்பதால், அ.தி.மு.க இனி தேவையில்லை, தனிக்கட்சி தொடங்கிவிடலாம் என்று எடப்பாடி தரப்பு முடிவுக்கு வந்திருப்பதாக பன்னீர்செல்வம் தரப்பு குழப்புகிறது.

இதுகுறித்து விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு, 'இந்தியத் தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்கள் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என முகவரியிட்டு அ.தி.மு.க.வுக்கு கடிதம் அனுப்பப்பட்டது' என்றார்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்னொரு முறை மாநில தேர்தல் ஆணையத்தால் நினைவூட்டுக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறதாம். மொத்தத்தில் ஒன்றரை கோடி தொண்டர்களையும் குழப்புவதென்று முடிவு செய்துவிட்டார்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com