மு.க  அழகிரியின் மறுபிரவேசம்?

மு.க அழகிரியின் மறுபிரவேசம்?

முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மைந்தனுமான, திரு.மு.க.அழகிரி, தி.மு.க.வில் இணைந்து செயலாற்றப் போவதாக தகவல்கள் கசிகின்றன.

முன்னதாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட, திரு.மு.க.அழகிரி அவர்கள், எந்தவித செயல்பாடுகளுமின்றி, அரசியலை விட்டு ஒதுங்கியே இருந்தார். இனி எப்படி செயல்படுவார்?, அரசியலில் மாற்றங்களை உருவாக்க அதிரடி நடவடிக்கைகளை எடுப்பாரா?, என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் கிடந்தனர். இப்போதும் மதுரையில் தனிச் செவ்வாக்கு உள்ளவர் , திரு.மு.க.அழகிரி அவர்கள்.

இந்நிலையில். தமிழக சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க.வைத் தோற்கடித்துவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து, ஆட்சியைக் கைப்பற்றியது. திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆனதிலிருந்தே, திரு.மு.க.அழகிரி அவர்கள், மீண்டும் தி.மு.க.வில் இணைந்து செயலாற்ற வேண்டும் என, அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரை முழுதும் ' போஸ்டர்களை' ஒட்டி, தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். இதற்கு திரு.மு.க.அழகிரி அவர்களிடமிருந்து, இதுவரை எந்தவித பதிலுமில்லை.

கடந்த ஜனவரி 16ந் தேதி, மதுரை வந்த, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மு.க.அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதனால் உற்சாகமடைந்த அழகிரியின் ஆதரவாளர்கள், அழகிரியின் பிறந்த நாளான, ஜனவரி 30 அன்று, மீண்டும் தி.மு.க.வில் இணைந்து செயல்பட வேண்டுமென மதுரையெங்கும், போஸ்டர்களால் நிரப்பியுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அழகிரி இணைந்த படங்களுடனும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாநிதி அழகிரியின் படங்களுடன், 'பழையன கழிதலும், புதியன புகுதலும், பொன்னர் சங்கர் நாடாளுமன்றத்தின் 40 இடங்களையும் கைப்பற்ற வேண்டும்' என்ற வாசகங்களுடன், போஸ்டர்கள், மதுரையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

நாளை எதுவும் நடக்கலாம். ஆனால் மதுரை ஆதரவாளர்கள் ஆர்வத்தின் உச்சத்திலிருக்கிறார்கள் என்பதே உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com