முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் கள ஆய்வு திட்டத்தில் மதுரை மண்டலம்!

முதலமைச்சர் கள ஆய்வு திட்டத்தின் கீழ் மதுரை மண்டலத்தில் அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை கடந்த பிப் 1-ஆம் தேதி தொடங்கினார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்டவாரியாக சென்று பல்வேறு திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தினை அறிமுகப் படுத்தியதிலிருந்து , முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கள ஆய்வுத் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணியை தொடங்கினார்.இம்மாதம் 15 மற்றும்16 ஆகிய தேதிகளில் சேலம் மண்டலத்தில் முதலமைச்சர் கள ஆய்வு நடத்தினார்.

அதனைத்தொடர்ந்து, அடுத்த மாதம் 5 மற்றும் 6-ம் தேதிகளில் மதுரை மண்டலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அப்போது மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் அரசுப் பணிகள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 5, 6ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு/மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மண்டலங்களுக்கான கள ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. விவசாயிகள், சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு பிரதிநிதிகளை முதல்வர் சந்தித்து கருத்துக்களை கேட்கிறார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறைத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கு கொள்வர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com