சிக்கலில் மம்தா பானர்ஜியின் உறவினர்; உச்சநீதிமன்ற தடை நீக்கப்பட்டு, சி.பி.ஐ விசாரணை தொடருமா?

சிக்கலில் மம்தா பானர்ஜியின் உறவினர்; உச்சநீதிமன்ற தடை நீக்கப்பட்டு, சி.பி.ஐ விசாரணை தொடருமா?

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு பெரும் தலைவலி இருப்பது, அவரது சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் பானர்ஜிதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை முன்னிறுத்தி ஏராளமான சர்ச்சைகளைத் தொடர்ந்து பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மத்திய அரசு மீது மம்தா பானர்ஜி விமர்சனம் செய்வதும், பின்னர் சில காலம் அமைதியாகிவிடுவதற்கும் பின்னணியில் அபிஷேக் பானர்ஜி இருப்பதாக சொல்லப்படுவதுண்டு.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நம்பர் டூவாக அபிஷேக் பானர்ஜி இருப்பதாக சொல்லப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கு அபிஷேக் பானர்ஜி முக்கியமான காரணம் என்று கட்சி வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. தேர்தல் வெற்றிக்கு பெரிய அளவில் பங்களித்தமைக்காக அபிஷேக் பானர்ஜியை தேசிய பொதுச்செயலாளராக மம்தா பானர்ஜி நியமித்திருந்தார்.

கட்சிக்குள் கிடுகிடுவென்று வளர்ந்து வந்த அபிஷேக் பானர்ஜி மீது ஊழல் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. சென்ற ஆண்டு அபிஷேக் பானர்ஜி மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இது தவிர ஆசிரியர் தேர்வு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியது.

ஆசிரியர் பணிநியமன வழக்கில் திரிணமூல் எம்.எல்.ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சி.பி.ஐ கைது செய்திருக்கிறது. மத்திய அரசு நிறுவனங்கள் வேண்டுமென்றே பொய் வழக்குகள் போட்டு எதிர்க்கட்சிகளை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை இருப்பதால் சி.பி.ஐ பானர்ஜி குடும்பத்தின் மீது பாய காத்திருக்கிறது என்கிறார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கு வங்க உயர்நீதிமன்றம் ஒரு விரிவான அறிக்கையை வரும் வியாழக்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அபிஷேக் பானர்ஜி மீது சி.பிஐ. விசாரணை நடத்தவும், அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தவும் தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது.

இந்நிலையில் மேற்கு வங்க காவல்துறைக்கு நீதிபதி கங்கோபத்யா தலைமையிலான தனி நபர் பெஞ்ச் யார் மீதும் வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்ததது சர்ச்சையாகியிருக்கிறது. கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான அப்ஜீத் கங்காபாத்யா, மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி சம்பந்தப்பட்ட வழக்கு பற்றி உள்ளூர் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் சர்ச்சைக்குரிய ஆசிரியர் தேர்வு வழக்கு பற்றி கருத்து தெரிவித்திருந்தார். ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி எப்படி வழக்கு பற்றி ஊடகங்களில் கருத்து தெரிவிக்க முடியும் என்று விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் அறிக்கை அனுப்பியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com