செந்தில் பாலாஜி கைது செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

மிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு  தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. இரண்டு தரப்பிலும் பலமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி கைதுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை எனவும், அவரை அமலாக்கத் துறை கைது செய்தது சரி என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com