DMK Files 2 வீடியோவிற்கு ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்!

DMK Files 2 வீடியோவிற்கு ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்!

DMK Files 2 எனும் பெயரில் அவதூறாக வீடியோ வெளியிட்டதற்கு ரூ.50 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

DMK Files என்ற தலைப்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மீதும், தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோரின் சொத்துப் பட்டியலையும் வெளியிட்டார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் கைக்கடிகாரம் குறித்து கடந்த சில மாதங்களாகவே பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த ரஃபேல் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.4 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றும், தன்னை விவசாயி எனக் கூறிக்கொள்ளும் அண்ணாமலையால் இந்த வாட்ச்சை எப்படி வாங்க முடிந்தது எனவும் திமுகவினர் கேள்வியெழுப்பினர்.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரஃபேல் கைக்கடிகாரம் குறித்த பில் மற்றும் தனது வரவு செலவு கணக்கை கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியிட்டார். இதனை தொடர்ந்து திமுக வினரின் சொத்துப் பட்டியலையும் வெளியிட்டார். மேலும், 2021-ம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி வரையிலான தனது வங்கிக் கணக்கின் வரவு செலவு விவரத்தையும் வெளியிட்டார்.

DMK Files என்ற தலைப்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மீதும், தி.மு.க. நிர்வாகிகள் மீதும் அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி. நோட்டீஸ் அனுப்பினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com