இஸட் பிளஸ் பாதுகாப்புடன் காஷ்மீர் பயணத்தில் கலந்து கொண்ட 'மோசடி நபர் கிரண் படேல்' குறித்து மோடி பதில் அளிக்க வேண்டும்: காங்கிரஸ்!

இஸட் பிளஸ் பாதுகாப்புடன் காஷ்மீர் பயணத்தில் கலந்து கொண்ட 'மோசடி நபர் கிரண் படேல்' குறித்து மோடி பதில் அளிக்க வேண்டும்: காங்கிரஸ்!

காஷ்மீர் பயணத்தில் பிரதமர் அலுவலக அதிகாரி போல் காட்டிக் கொண்ட குஜராத் மோசடிப் பேர்வழி குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை.

பிரதமர் அலுவலக அதிகாரி என்ற போர்வையில் ஜம்மு காஷ்மீருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்புடன் சென்ற மோசடி பேர்வழி கிரண் படேல் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி குஜராத் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை அகமதாபாத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது.

இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மிகவும் பதற்றமான பகுதிக்கு பிரதமர் அலுவலக அதிகாரியாக கிரண் படேல் சென்றது குறித்த தகவல் வெளியானதும், அது அனைவருக்கும் குறிப்பாக தேசத்தின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதற்கு தேசத்தின் குடிமக்களுக்கு பொறுப்பான பிரதமராக மோடி பதிலளிக்க வேண்டும். என்று கூறினார்.

படேல் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் இயக்குநராக (வியூகம் மற்றும் பிரச்சாரம்) நடித்தார், மேலும் PMO விசிட்டிங் கார்டையும் வைத்திருந்தார். அவர் மார்ச் 3 ஆம் தேதி ஸ்ரீநகரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 15 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, அவர் இப்போது 15 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

விசாரணையில், படேல் அகமதாபாத்தில் உள்ள இசான்பூரைச் சேர்ந்தவர் என்பது புலனாய்வு அமைப்புகளுக்கு தெரியவந்தது. அத்துடன் ஓராண்டுக்கு முன் தான் அங்கு அவர் ஒரு பெரிய பங்களா வாங்கி இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.

ஆனால், பெடேல் ஒரு நிரபராதி என்று அவரது மனைவி மாலினி படேல் கூறியுள்ளார். அகமதாபாத்தில் உள்ளூர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர், "கிரண் தற்போது ஸ்ரீநகரில் இருக்கிறார், நாங்கள் ஒருபோதும் தவறு செய்யவில்லை, காஷ்மீர் செழிக்க உதவுவதற்கே கிரண் அங்கு சென்றார். ஆனால், இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மோசடிப் பேர்வழி போன்று இப்போது ஊடகங்களால் கட்டமைக்கப்படுகிறார். காஷ்மீரில் இருந்து எங்களுக்கு சாதகமான பதில் கிடைத்தது, எங்களுக்கு எதிரான அனைத்து முன் வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. என்றார் அவர்.

கிரண் படேல் மிகவும் வெளிப்படையானவர், கவர்ச்சியான வாழ்க்கையை நடத்த விரும்பினார். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் அந்த நிறுவனங்களின் கடிதங்களை

இடுகையிடுவதன் மூலம் அவர் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்திருப்பதாகவும் காட்டிக் கொண்டார்.

படேல், அகமதாபாத்தில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார், லாக் டவுன் காலத்தில், அவர் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார், அதில் அவர் தனது தன்னார்வலர்கள் மூலமாக அகமதாபாத் முழுவதும் தேவைப்படும் மக்களுக்கு இலவச மருந்துகளை விநியோகித்தார். இதற்காக அவர் 'ஆர்பி ஹெல்பிங் ஹேண்ட்ஸ்' என்ற வாட்ஸ்அப் குழுவையும் உருவாக்கினார்.படேல் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படுவது இது முதல் முறை அல்ல.

"அமதாபாத்தில் அவருக்கு எதிராக இரண்டு முந்தைய எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன, அதில் காசோலை திரும்பப் பெறுதல் மற்றும் தனிப்பட்ட நிலுவைத் தொகையில் சிக்கல்கள் இருந்தன. இது தவிர, அவர் மீது எந்த வழக்குகளும் இல்லை. காஷ்மீர் செல்வதற்காக அவருக்கு அரசியல் நண்பர் ஒருவரால் பாதுகாப்பு வழங்கப்பட்டது," என்று படேலின் வழக்கறிஞர் நிசார் வைத்யா உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

படேல் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பாட்டில் உள்ளார். அவரது ட்விட்டர் கணக்கும் சரிபார்க்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com