முதல்வர் நாற்காலிக்கு அவசரப்படவில்லை: தேஜஸ்வி யாதவ்!

முதல்வர் நாற்காலிக்கு அவசரப்படவில்லை: தேஜஸ்வி யாதவ்!

பிகாரில் கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து முதல்வரானார் நிதிஷ்குமார். பின்னர் பா.ஜ.க. கொடுத்த நெருக்கடியாலும், பா.ஜ.க.வின் திரை மறைவு வேலைக்கண்டு கூட்டணியை முறித்துக் கொண்டு லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்து முதல்வராகத் தொடர்கிறார்.

கடந்த சில மாதங்களாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியினரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை கூறிவந்தனர். மேலும் தேஜஸ்விக்கு எப்போது முதல்வர் பதவி என கேட்டு நச்சரித்து வந்தனர். எனக்கு பின் முதல்வர் பதவிக்கு தேஜஸ்வி மிக பொருத்தமானவர் என்று நிதிஷ்குமாரும் பதில் கூறிவந்தார்.

இந்த நிலையில் பிகார் முதல்வர் நிதிஷ்குமாரை வெளியே அனுப்பிவிட்டு முதல்வர் நாற்காலியில் உடனடியாக அமரும் எண்ணம் இல்லை. முதல்வர் பதவிக்கு நான் அவசரப்படவில்லை. இது தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதியான நிதிஷ்குமார், பிகார் முதல்வராக ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பார். 2030 ஆம் ஆண்டு வரை அவர் மாகா கூட்டணிக்கு தலைமை வகிப்பார் என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர்கள் பேசிவருகின்றரே. ஏமாற்றப்பட்டதாக நீங்கள் உணரவில்லையா என்று பத்திரிகையாளர்கள் தேஜஸ்வியிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த 30 வயது இளம் தலைவரான தேஜஸ்வி, அவர்கள் அப்படிச் சொன்னதில் என்ன தவறு? நிதிஷ்குமார் முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர். அவர் நீண்டநாள்

முதல்வராக இருப்பது ஒரு நல்ல அனுபவம்தானே என்று கூறினார்.

நிதிஷ்குமார், லாலுவின் அரசியல் வாரிசான தேஜஸ்வியுடன் பேரம் நடத்தித்தான் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்ததாக குற்றஞ்சாட்டிவந்த ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் உப்நேதிர குஷ்வாஹா சமீபத்தில் கட்சியிலிருந்து வெளியேறினார். அத்தகைய சூழ்நிலையில் தேஜஸ்வியின் இந்த கருத்து ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு நிம்மதி அளித்துள்ளது.

கடந்தசில நாட்களாகவே ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர், ஹோலிக்கு பிறகு நிதிஷ் பதவி விலகி விடுவார், தேஜஸ்வி முதல்வர் ஆவார் என்று பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.

வருகிற பொதுத் தேர்தலில் பிகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளையும் எங்கள் கூட்டணி கைப்பற்ற வேண்டும். பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதில்தான் எங்கள் கவனம் உள்ளது என்று தேஜஸ்வினி யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சாவின் தலைவர் ஜிதன்ராம் மன்ஜியின் மகன் சந்தோஷ் சுமனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜிதன்ராம்த தமது மகன் அமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார். தன்னைவிட தன் மகன் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று ஒரு தந்தை எதிர்பார்ப்பதில் என்ன தவறு? என்றும் தேஜஸ்வி கேட்டார்.

இதனிடையே தேஜஸ்வியும் அவரது ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியினரும் நிதிஷ்குமாரை மெல்ல மெல்ல பலவீனப்படுத்தி வருவதாக உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் தேஜஸ்வின

வருகைக்காக முதல்வர் நிதிஷ்குமார் இரண்டுமணி நேரம் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com