அவதூறு வழக்கில் மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை: ராகுல்காந்தி திட்டவட்டம்!

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

மோடி சமூகத்தினர் குறித்த அவதூற வழக்கில தாம் குற்றவாளி அல்ல என்றும் எனவே மன்னிப்பு கேட்கும் எண்ணம் எதவும் இல்லை என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 2019 ஆம் ஆண்டு மக்களைத் தேர்தல் பிரசாரத்தின் போது மோடி சமூகத்தினர் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி என்பவர் குஜராத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனையை நிறுத்திவைக்க்க் கோரிய மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளபடி செய்தது.

இதைத் தொடர்நது சிறைத்தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரால் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் இருதரப்பினரையும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் ராகுல்காந்தி தரப்பு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

குற்றவியல் நடைமுறை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை பயன்படுத்தி செய்யாத ஒரு குற்றத்துக்காக ஒருவரை மன்னிப்புக் கேட்க அழுத்தம் கொடுப்பு, நீதித்துறையை துஷ்பிரயோகம் செய்வதாகும். இதை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்க்கூடாது.

இந்த வழக்கில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் நான் எப்போதோ செய்திருப்பேன். நான் குற்றமற்றவன். எனவே மன்னிப்பு கேட்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று ராகுல் பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கு வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை தொடரும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ரஃபேல் போர் விமானம் கொள்முதல் ஊழல் விமர்சித்த ராகுல்காந்தி, திருடர்களின் தளபதி என பிரதமர் மோடியை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மகேஷ் ஸ்ரீமல் என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com