பொங்கல் பரிசு  அரிசி, சர்க்கரையுடன் .....1000 ரூபாய் ரொக்கப்பணம்!

பொங்கல் பரிசு அரிசி, சர்க்கரையுடன் .....1000 ரூபாய் ரொக்கப்பணம்!

தமிழக அரசு தைப்பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை ஆகிய பொருட்களுடன் ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியினை வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார்.

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

pongal gift
pongal gift

தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், வருடம்தோறும் ரொக்கப் பணமும் வழங்கப்படும்.

கடந்த முறை வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் வரும் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கான பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரி, ஒரு கிலே சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைத்தாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 02, 2023 அன்று சென்னையிலும் , அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com