பணநாயகம் வென்றுள்ளது... எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியானது. தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 65,000-க்கும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் .

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தொண்டர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி.

பணபலம் மூலம் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி , திரிபுரா, நாகலாந்து தேர்தலில் பாஜக பெற்ற வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என்றார்.

மேலும் 22 மாதமாக சம்பாதித்த பணத்தை வைத்து தண்ணீர் போல் பணத்தை வாரி இறைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது. பணமழை பொழிந்துள்ளது.

தி.மு.க, அமைச்சர்கள் தேர்தல் விதிமுறைகளை பல இடங்களில் மீறியுள்ளனர். இந்த தேர்தலை வைத்து தி.மு.க வெற்றி பெற்றதாக கொண்டாடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இந்த வெற்றி தேர்தல் ஆணையத்தின் தோல்வி. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும்.

120 இடங்களில் வாக்காளர்களை டெண்ட் அமைத்து பட்டியில் அடைத்து பணத்தை கொடுத்து பல்வேறு பரிசு பொருள்கள் கொடுத்துள்ளனர். வெள்ளி கொலுசு, வாட்ச், குக்கர் வழங்கி வாக்காளர்கள் வீடுகளுக்கு கோழிக்கறி கொடுத்து மளிகை ஜாமான் கொடுப்பதாக டோக்கன் வழங்கி வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய தேர்தல் ஆணையம், மாநிலத் தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தோம். ஆனால் தேர்தல் அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்ட திமுக மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 22 மாத காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு முதலீடு செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். ஜனநாயகபடி நின்றால் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கும் என்று அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com