ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா! ஒன்றாக உணவருந்திய ஒபிஎஸ், இபிஎஸ்!

Eps  Ops
Eps Ops

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை நடைபெற்ற இந்த விழாவிற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லக்ஷ்மி ஆகியோருக்கு பாரம்பரிய முறையில் பரிவட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை நிற வேட்டி சட்டையில் ஆளுநர் பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.

விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, விருந்தினர்களை வரவேற்று பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார். பின்னர் பொங்கல் வைக்கும் இடத்திற்கு சென்ற ஆளுநரும், அவரது மனைவியும் புத்தரிசியை பானையில் போட்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்த்தாய் வாழ்த்துடன் பொங்கல் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. நாதஸ்வர மங்கல இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய கலை விழாவில் காவடி, கரகம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் களைகட்டின. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் தங்களின் சிலம்பத் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். அதனைத் தொடர்ந்து மரக்கால் ஆட்டம், தப்பாட்டம், கை சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கடைசியாக நடைபெற்ற காளியாட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவந்தது.

கலை நிகழ்ச்சியில் முடிவில் கலைஞர்களுடன் இணைந்து ஆளுநர் ஆர்.என்.ரவி புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களை ஆளுநர் கௌரவித்தார். தொடர்ந்து உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு நன்றி கூறிய போது தமிழ்நாடு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக தேசிய கீதம் முழங்க நிகழ்ச்சி நிறைவடைந்தது.

நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் விருந்தினர்களுக்கு இரவு உணவு பரிமாறப்பட்டது. அதிமுக உட்கட்சி பிரச்னை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே மேஜையில் அமர்ந்து ஆளுநர் மாளிகையில் விருந்து சாப்பிட்டனர். இந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆளுநர் மற்றும் ஆளும் கட்சியினரிடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நெடிது வருவது ஆண்டவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து திமுக மற்றும் அதனை தோழமைக் கட்சிகள் ஆளுநர் மாளிகையின் பொங்கல் விழாவை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com