பெங்களூருவில் நிதிஷ்குமாருக்கு
எதிரான சுவரொட்டியால் பரபரப்பு!
Editor 1

பெங்களூருவில் நிதிஷ்குமாருக்கு எதிரான சுவரொட்டியால் பரபரப்பு!

பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் பிகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிராக சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. நிதிஷ்குமார் நிலையில்லாதவர். அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக்கூடாது என்று அந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நிதிஷ்குமார், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.இதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி, ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனை உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்குவங்க முதல்வர் ம்ம்தா பானர்ஜி  உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.பின்னர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வேண்டுகோளின் பேரில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.

வரும் மக்களவைத் தேர்திலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்தலாம் என்ற நிதிஷ்குமாரின் யோசனையும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் பெங்களூரில், எதிர்க்கட்சிகள் கூட்டணியின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில்  நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் ம்ம்தா பானர்ஜி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே பெங்களூரு நகரில் சாளுக்கிய சர்க்கிள், விண்ட்ஸர் மனோர் பாலம், விமானநிலையம் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் நிதிஷ்குமாருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. நிதிஷ்குமார் நிலையில்லாதவர். அவர் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியற்றவர் என்று விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.எனினும் இது குறித்து நிதிஷ்குமார் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் இதுபற்றி கேட்டபோது, நிதிஷ்குமார் தவறை உணர்ந்துவிட்டார். இனி அவர் பா.ஜ.க.வுடன் ஒருபோதும் சேரமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி கொள்கையற்றவர் என்று காங்கிரஸ் கருத்து கூறியுள்ளது பற்றி அவரிடம் கருத்துத் தெரிவிக்கையில் முதலில் காங்கிரஸ் இந்த கேள்வியை நிதிஷ்குமாரிடம் கேட்கட்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com