ராகுல் காந்தி  ஜெகதீஷ் டைட்லர்
ராகுல் காந்தி ஜெகதீஷ் டைட்லர்

பாரத் ஜோடா யாத்ராவிற்கு சிக்கல் ! கொரோனா காரணமா?

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காவிட்டால், தேசிய ஒற்றுமை நடை பயணத்தை ஒத்தி வைக்க வேண்டும் என, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேசிய ஒற்றுமை நடைபயணத்தை( பாரத் ஜோடா) மேற்கொண்டு வருகிறார். அந்த தேசிய ஒற்றுமை நடைபயணத்தை 100 நாட்கள் தாண்டியும் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.இதில் சில நாட்களுக்கு முன்பு கமலஹாசன் பங்கேற்க விருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது குறிப்பிடத்தக்கது. ராகுலுக்கு பல தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது கோவிட் காரணமாக சில சிக்கல்கள் எழுந்துள்ளது.

தற்போது சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தேசிய ஒற்றுமை நடை பயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பேரணியில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே, பேரணியில் பங்கேற்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார். ராகுல் காந்தி இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், நடைபயணத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com