இலவச வேஷ்டி , சேலை பொங்கலுக்குள் வழங்காவிட்டால் போராட்டம் நடைபெறும்!

எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை !
இலவச வேஷ்டி , சேலை பொங்கலுக்குள் வழங்காவிட்டால் போராட்டம் நடைபெறும்!
Published on

பொங்கலுக்குள் இலவச வேட்டி-சேலைகளை திமுக அரசு வழங்காவிட்டால், அதிமுக மாபெரும் போராட்டத்தை கையில் எடுக்கும் என எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது பொங்கலுக்கு அரசு வழங்கப்படும் இலவச வேட்டி மற்றும் இலவச சேலை அனைவருக்கும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ரேசன் கடைகளில் வழங்குவதற்காக, தலா 1.75 கோடி வேட்டிகள் மற்றும் சேலைகளை உற்பத்தி செய்ய கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு ஆர்டர் வழங்கியுள்ளது.

ஆனால், வழக்கமாக 6 மாதங்களுக்கு முன்பு ஆர்டர் வழங்குவதற்கு பதிலாக, தற்போது 3 மாத அவகாசமே கொடுக்கப்பட்டதால் பொங்கலுக்குள் முழு உற்பத்தி சாத்தியமில்லை என ஈரோடு மாவட்ட நெசவாளர்கள் தெரிவித்தனர்.

இதுவரை, 27% வேட்டிகள், 40% சேலைகள் மட்டுமே தயாராகி இருப்பதாகவும், தொடக்கத்தில் தரமில்லாத நூல்களை வழங்கியதால் உற்பத்தி மேலும் தாமதமானதாகவும் நெசவாளர்கள் கூறியுள்ளனர்.

இதனால் பொங்கலுக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளை களைந்து குறித்த காலத்தில் வழங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் தை பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி , சேலை நெய்யும் பணி முடங்கி உள்ளதாக புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

திமுக அரசு ஜூலை மாதமே வழங்க வேண்டிய துணி நெய்யும் உத்தரவினை அக்டோபர் மாதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய நூல் நவம்பர் கடைசியில் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும், துணி நெய்வதற்கு உதவாத தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொங்கலுக்குள் இலவச வேட்டி-சேலைகளை வழங்காவிட்டால், நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி அதிமுக மாபெரும் போராட்டத்தை கையில் எடுக்கும் என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com