தி.மு.க நிர்வாகிகளின் சொத்துப்பட்டியல் வெளியீடு; அண்ணாமலையின் அடுத்த அதிரடி என்ன?

தி.மு.க நிர்வாகிகளின் சொத்துப்பட்டியல் வெளியீடு; அண்ணாமலையின் அடுத்த அதிரடி என்ன?

தி.மு.க நிர்வாகிகளின் ஊழல், சொத்துக்குவிப்பு பட்டியலை வெளியிடுவேன் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன் படி நேற்று காலை சொத்துக்குவிப்பு பட்டியலை வெளியிட்டார். தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய பட்டியலுக்கு உடனடியாக எதிர்வினைகள் குவிந்தன.

திராவிட மாடல் காரணமாக வளர்ச்சியே இல்லை. ஆனால், தமிழகம் முழுவதும் பரவலாக வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. திராவிடக்கட்சிகள் பல ஆண்டுகள் ஆட்சி செய்தும் பரவலான வளர்ச்சி ஏற்படவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை இரண்டு நகரங்களையே சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது.

இரண்டுமே ஆங்கிலேயேர்களின் வசதிக்காக வடிவமைக்கப்பட்ட நகரங்கள். தமிழ்நாட்டில் 65 சதவீத பொருளாதாரத்தை நிர்ணயிப்பது சம்பந்தப்பட்ட இரு நகரங்கள்தான் என்று அடுத்து சர்ச்சையை அண்ணாமலை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

அடுத்ததாக தி.மு.கவைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்திருக்கிறார். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் விவகாரத்தை தோண்டியெடுத்து, மறந்து போன விஷயங்களையெல்லாம் அண்ணாமலை நினைவுபடுத்துவார் என்கிறார்கள், பா.ஜ.கவினர்.

தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024-ல் ஆண்டுக்குள் வெளியிடப்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் எந்தப் பிரச்னை வந்தாலும் சந்திக்க தயார் என்று அறிவித்து உள்ள அண்ணாமலை, தற்பாது கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இது குறித்து கமலாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, இது டிரைலர்தான். மெயில் பிக்சர் இனிமேல்தான் வெளியாகும் என்கிறார். தி.மு.க தரப்பு எந்தளவுக்கு இதை எதிர்கொள்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்தடுத்து நகர்வுகள் இருக்கப்போகின்றன என்கிறார்கள். கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும், அண்ணாமலை மறுபடியும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஊழல் பட்டியலை வெளியிடுவார் என்கிறார்கள்.

இந்நிலையில் தி.மு.கவினர் மீது அண்ணாமலை தரப்போகும் ஊழல் பட்டியலை 4 பகுதிகளாக வெளியிடுவேன் என்று தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு பட்டியலும் ஒரு வாரத்திற்கு விவாதத்திற்கு உள்ளாகும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. முதல் பட்டியலை வெளியிட்ட பின்னர், ஆளுநரை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் தருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.கவினர் மீது ஊழல் புகார்களை அண்ணாமலை முன்வைப்பார் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தார்கள். ஏன், தி.மு.கவினர் கூட இதை எதிர்பார்த்திருந்தார்கள். அண்ணாமலையில் டிரைலர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அடுத்தடுத்து ரிலீஸில் அண்ணாமலை கவனம் செலுத்தி, அரசியல் வட்டாரத்தை அதிர வைப்பார் என்று நம்புவோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com