பாஜக கூட்டணி அரசுகளுக்கு எதிராக: புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட்ட அதிமுக!

மாதிரி படம்
மாதிரி படம்Editor 1

மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி அதிமுகவினர் புதுச்சேரி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு இன்று (ஜூலை 18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வழங்கப்படுவது போல் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை  புதுச்சேரியிலும் வழங்க வேண்டும் என்று கூறி அதிமுகவின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசி அன்பழகன், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருதி, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் புதுச்சேரி அரசு 7.5% உள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்காக கடந்த ஆண்டே அதிமுகவின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை  நிறைவேற்றப்படவில்லை. தற்போது மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் ஏற்கனவே நீட் தேர்வு காரணமாக ஏழை எளிய மாணவர்கள்  மருத்துவராக முடியாமல்  சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் மருத்துவ சீட்டுகள் ஏழை எளிய மாணவர்களுக்கு கட்டாயம் சென்றடைய வழி ஏற்படும். இதற்கு என்.ஆர். காங்கிரஸ், பாஜக அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com