மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராகுலை  தகுதி நீக்கம் செய்யவேண்டும்! வழக்கறிஞர் வினித் ஜிண்டால் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு!

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராகுலை தகுதி நீக்கம் செய்யவேண்டும்! வழக்கறிஞர் வினித் ஜிண்டால் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு!

மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி பேசினார். 2019 ஆம் ஆண்டில் மோடி குடும்பப் பெயர் தொடர்பாக "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருப்பது எப்படி" என்று ராகுல் காந்தி பேசியிருந்தார். 4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் தற்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினித் ஜிண்டால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்துள்ளார்.

எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8(3)-ன்படி தீர்ப்பு வழங்கிய நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும். எனவே இந்த சட்ட விதிகளின்படி, ராகுல் காந்தியை எம்.பி. பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக இன்றே அறிவிக்க முடியும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com