தனித்து தேர்தல் சந்திக்கத் தயார்: பாஜகவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன்மோகன்!

தனித்து தேர்தல் சந்திக்கத் தயார்: பாஜகவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன்மோகன்!

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சியின் ஆதரவும் தேவையில்லை. தனித்து தேர்தலை சந்திக்க தயார் என்று பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மாநில முதல்வரும், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா குறைகூறி விமர்சித்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பா.ஜ.க., தெலுங்குதேசம் விரித்த வலையில் விழுந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஏழைகளின் காவலன் என்று ஜெகன்மோகன் அரசு கூறிக்கொள்கிறது. ஆனால், விவசாயிகள் தற்கொலையில் ஆந்திரமாநிலம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. இதற்காக முதல்வர் ஜெகன் மோகன் வெட்கப்படவேண்டும். மேலும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மோடி அரசு கொடுத்த நிதியை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் முறையாக செலவிடவில்லை என்றும் அமித்ஷா குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பலநாடு மாவட்டம் க்ரோசுரு என்னுமிடத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “எந்த ஒரு அரசில்கட்சியின் ஆதரவும் எங்களுக்குத் தேவையில்லை, மக்கள்தான் எங்களுக்கு பலம். மக்கள் ஆதரவு இருக்கும் வரை எங்களை யாரும் அசைக்க முடியாது என்று குறிப்பிட்டார். மேலும் தெலுங்குதேசம் கட்சியைப் போல் பிறகட்சிகளிடம் ஆதரவு கேட்டு நாங்கள் நிற்கவில்லை என்றும் கூறினார்.

எனினும் கட்சியின் மூத்த தலைவரும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவருமான ஓய்.வி.சுப்பா ரெட்டி விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கு தேசம் விரித்த வலையில் பா.ஜ.க. விழுந்துவிட்டதாக கூறினார். தெலுங்குதேசம் கட்சியிலிருந்து பிரிந்து சென்று பா.ஜ.க.வில் இணைந்த சிலரின் பேச்சை அமித்ஷா கேட்டு நடப்பதாக குற்றஞ்சாட்டினார். ஏழைகளின் நலனுக்காக செயல்பட்டு வரும் ஜெகன் மோகன் அரசு மீது அமித்ஷா அபாண்டமாக பழிசுமத்தியுள்ளது துரதிருஷ்டமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தெலுங்கு தேசம் கட்சி 2014 முதல் 2019 வரை ஆட்சி செய்தபோது நடந்த ஊழலில் பா.ஜ.க.வுக்கும் பங்கு இருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆந்திர அரசின் வளர்ச்சிப்

பணிகளுக்காக மோடி அரசு பணம் கொடுத்ததாக கூறும் அமித்ஷா, என்ன கொடுத்தது என்பதை விளக்க வேண்டும் என்றும் கோரினார்.

ஆந்திர மாநிலத்தில் 20 எம்.பி. தொகுதிகள் வேண்டும் என்று அவர் எதைவைத்துக் கேட்கிறார் என்றும் சுப்பா ரெட்டி கேள்வி எழுப்பினார்.

இதனிடையே தெலுங்குதேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் எம்.எல்.சி.யுமான பர்சூரி அசோக் பாபு, ஜெகன் விடும் அறிக்கைகளை பார்த்தால் அவர் பாதுகாப்பு இல்லாத நிலையை உணர்ந்து கொண்டுள்ளார் எனத் தெரிகிறது. மேலும் தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் அவர் மனதில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வியை மறைக்க அவர் சந்திரபாபு நாயுடு மீது புழுதியைவாரி தூற்றுகிறார் என்றார் அவர்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தராத மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை நேரடியாக தாக்கிப் பேச ஜெகன் பயப்படுகிறார். கடந்த காலங்களில் பலமுறை பா.ஜ.க. தலைவர்களை சந்தித்துப் பேசியும் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. இதை ஏன் அவர் வெளிப்படையாகச் சொல்ல பயப்படுகிறார் என்றும் அசோக் பாபு கேள்வி எழுப்பினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com