அண்ணாமலை
அண்ணாமலை

எனது வங்கி கணக்குகளை வெளியிட தயார்! அண்ணாமலை அதிரடி!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் சென்னை கீழ்பாக்கத்தில் 'சமத்துவ கிறிஸ்துமஸ் விழா ‘ கொண்டாட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து , கிறிஸ்தவ மத தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அண்ணாமலை, பாஜக சார்பில் சமத்துவ கிருஸ்துமஸ் விழா முதன் முறை நடக்கிறது . 1940 முதல் ஏதோவொரு காரணத்தால் அரசியலும் , மதமும் இணைத்து விடப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி மத அடிப்படையில் மாநிலங்களை பிரித்தனர் , பெங்கால் மாநிலத்தை மத அடிப்படையில் பிரிக்க ஷியாம பிரசாத் முகர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார். பாஜகவிற்கு அனைத்து மதத்திலிருந்தும் தலைவர்கள் வருவர் எந்த மதத்தையும் யார் மீதும் திணிக்க மாட்டோம் என்றார்.

பாஜக உடனடியாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை நிறுத்தியதால் இசுலாமியர்களுக்கு எதிரான கட்சி என தமிழகத்தில் சில கட்சியினர் பேசுகின்றனர். இந்தியா இப்போதுதான் உடனடி முத்தலாக்கை நீக்கியுள்ளது. ஆனால் 1961 ல் பாகிஸ்தான் எடுத்து விட்டது. உடனடி முத்தலாக்கை நீக்கிய 23 வது நாடுதான் இந்தியா , ஆப்கானிஸ்தான் , இலங்கை, வங்கதேசம் , இந்தோனேசியாவில் உடனடி முத்தலாக் நடைமுறை முன்பே தடை செய்யப்பட்டு விட்டது என கூறினார்.

தமிழகம் முழுவதும் விரைவில் பாஜக சார்பாக நடை பயணம் மேற்கொள்ள உள்ளேன் , 234 தொகுதிகளுக்கும் நடந்து சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்க செல்ல உள்ளேன். எனது நடைபயணத்தை தொடங்கும்போது , நான் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான 2010 – 11ம் ஆண்டு முதல் எனது வங்கிக் கணக்கு நிதி விவரங்களை , மக்களுக்கு சமர்ப்பிக்க உள்ளேன். கடந்த 13 ஆண்டில் நான் செய்த அனைத்து செலவுகள், எனது வருமானம் குறித்து இணையதள வலைதளத்தில் நடைபயணம் தொடங்கும் முதல் நாளிலேயே பதிவு செய்ய உள்ளேன்.

பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை

எனது மனைவி என்னைவிட 7 மடங்கு அதிகம் ஊதியம் பெறுகிறார். அவரது ஊதிய விவரத்தையும் வெளியிட உள்ளேன். கட்சித் தலைவரான பிறகு நான் எனது மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்வதில்லை , ஒன்றாக குடும்ப திருமணங்களுக்கும் செல்வதில்லை. அரசியலுக்காக என் மீது வீசப்படும் சேறு அவர் மீது படக்கூடாது என்று அவருடன் சேர்ந்து நான் எங்கும் செல்வதில்லை . தேர்தல் ஆணையம் 10% விவரங்களைத்தான் கேட்கும் , நான் 100% விவரங்களையும் தெரியப்படுத்துகிறேன் என பேசினார்.

ரஃபேல் விமானம் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று போலீஸ் அதிகாரியாக எதிர்பார்த்தவன் , பல கூட்டங்களில் ரபேல் குறித்து பேசியுள்ளேன். எனவே ரபேல் நிறுவன கடிகாரத்தை நான் அணிந்துள்ளேன். எனது அப்பா , என் அம்மா , என் உடன் பிறந்தோர் , என் மனைவியின் வங்கிக் கணக்கு விவரங்களையும் வெளியிட உள்ளேன். எனது மனைவி குடும்பத்தினர் அனுமதி பெற்று அவர்களது வங்கி விவரங்களையும் வெளியிடுவேன் “என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com