அண்ணாமலை
அண்ணாமலை

திமுக ஊழல் குறித்து டோல் ஃப்ரீ எண்ணில் புகார் கொடுங்கள்; பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

திமுக-வில் 13 அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் சொத்து மதிப்பாக ரூ. 2 லட்சம் கோடிக்கான பட்டியல் தன்னிடம் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள வாட்ச் குறித்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

நான் கட்டியுள்ள கைக்கடிகாரம் ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்டது. அதன் விலை மூன்றரை லட்சம் ரூபாய் ஆகும்.

இந்த  கைக்கடிகாரம் விவகாரத்தை திமுக ஊழல் அரசு பெரிதுபடுத்தப் பார்க்கிறது. ஆனால் தி.மு.க-வின் 13 அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் சொத்துப் பட்டியல் என்னிடம் உள்ளது.

அந்த வகையில் அவர்களின் ரூ. 2 லட்சம் கோடி ரூபாய்க்கான சொத்து பட்டியலை விரைவில் வெளியிடுவேன். மேலும் மக்கள் இந்த ஊழல் ஆட்சி குறித்து நேரடியாக எங்களிடம் தெரிவிக்கும் வகையில் விரைவில் ‘டோல் ஃப்ரீ” எண் அறிவிக்க உள்ளோம்.

அந்த எண்ணில் மக்கள் தொடர்பு கொண்டு நேரடியாக தி.மு.க.,வினர் அபகரித்த நிலங்கள், சொத்து, ஊழல்கள் குறித்து புகார்களைத் தெரிவிக்கலாம்.

-இவ்வாறு அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com