எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நாளை பங்கேற்கிறார் சரத் பவார்!

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில்
நாளை பங்கேற்கிறார் சரத் பவார்!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டணிகள் ஆலோசனை கூட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பங்கேற்கிறார்.

அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த அஜித்பவார் மற்றும் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை சரத் பவாரை சந்தித்து பேசி ஆசி பெற்றனர். இந்த நிலையில் சரத்பவார் சமாதானமாக போய்விடுவார் என்ற எண்ணம் பலரின் மனதில் இருந்த்து. இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பவார் பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை ஏற்பாடு செய்துள்ள விருந்தில் பங்கேற்காமல் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டத்தில் நேரிடையாக பங்கேற்க சரத் பவார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. 24 அரசியல் கட்சிகள் சேர்ந்துள்ள எதிர்க்கட்சி அணிகளின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கருத்து வேறுபாடுகளை மறந்து பா.ஜ.க. எதிராக ஒன்றுபட்டு செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. மகாராஷ்டிர அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டுள்ளதால் சட்டப்பேரவை கூட்டம் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார், தமது ஆதரவாளர்களுடன் ஆளும் சிவசேனை-பா.ஜ.க. அரசில் இணைந்தார். ஏற்கெனவே அஜித் பவார் கோஷ்டிக்கு பேரவையில் தனி இடம் ஒதுக்குமாறு சரத் பவார் கோஷ்டியினர் பேரவைத் தலைவரிடம் கோரியுள்ளனர். அரசு சார்பில் நடைபெற்ற தேநீர் விருந்தை ஏற்கனவே எதிர்க்கட்சி கோஷ்டியான உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனை, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் சில அமைச்சர்கள் சரத் பவாரை நேரில் சந்தித்து கட்சியில் பிளவு வேண்டாம், ஒற்றுமையாக இருப்போம் என்று வலியுறுத்தியதாக பிரபுல் படேல் தெரிவித்தார்.சரத் பவாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்த பிறகு அஜித் பவார் கோஷ்டியினர் சரத் பவாரை சந்தித்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

அஜித்பாவருடன், அமைச்சர்கள் ஹஸன் முஷ்ரிப், சக்கன் புஜ்பல், அதிதி தட்கரே, திலிப் வால்ஸே பாடீல் ஆகியோரும் மும்பையில் ஓய்.பி.சவான் மையத்தில் சரத் பவாரை சந்தித்துள்ளனர்.இந்த சந்திப்பு பிறகு பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (அஜித் பிரிவு)  மாநிலங்களவை உறுப்பினர் பிரபுல் பட்டேல், சரத் பவார் எங்களது குரு, அவரிடம் வாழ்த்து பெறவே வந்தோம் என்று தெரிவித்தார்.

தாங்கள் கூறியதை பவார் பொறுமையுடன் கேட்டதாகவும், ஆனால் எந்தவித பதிலும் ர் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒருவேளை சரத்பவார் அவர்களுடன் சமாதானமாக போய்விடலாம் என்று கருதப்பட்ட நிலையில் சரத்பவார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com