‘நாடாளுமன்றத் தேர்தலை நாங்கள் ஒன்றாக இணைந்து சந்திப்போம்’ சசிகலா அறிவிப்பு!

‘நாடாளுமன்றத் தேர்தலை நாங்கள் ஒன்றாக இணைந்து சந்திப்போம்’ சசிகலா அறிவிப்பு!

மிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் மருத்துவர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் அவரது தோழி வி.கே.சசிகலா. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும்படியாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு இருக்கிறது. மூன்று வருடங்களில் இந்தப் பெருமைமிக்க கட்டடத்தைக் கட்டி முடித்து, அதனை பிரதமர் திறந்து வைக்க இருக்கிறார். எதிர்க்கட்சிகள் தாங்கள் இருப்பதைக் காட்டிக்கொள்ளவே புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணித்து இருக்கின்றன.

ஒரு கட்சியில் தொண்டர்களின் விருப்பமே எப்போதும் வெற்றி பெறும். அதிமுக தொண்டர்களின் விருப்பம் என்ன என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். கட்சியினரின் ஆதரவு, பொதுமக்களின் ஆதரவு இரண்டும் இருந்தால்தான் அரசியலில் தலைமைப் பதவிக்கு வர முடியும். வரும் காலத்தில் தேர்தல்களின்போது இதனைப் பார்க்கலாம். இந்த மாற்றத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது பார்க்க முடியும். ஓபிஎஸ்ஸை சந்திப்பதில் எனக்கு எந்தத் தடையும் கிடையாது. எல்லோரையும் ஒன்றாக அரவணைத்துச் செல்வதுதான் என்னுடைய வேலை. நாடாளுமன்றத் தேர்தலின்போது மூன்று அணிகளும் ஒற்றுமையாக இருந்து தேர்தலைச் சந்திப்போம். நான் நினைத்ததை முடித்துக்கொண்டே வருகிறேன்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கள்ளச்சாராய இறப்பைப் பார்த்திருக்க முடியாது. தமிழ்நாட்டை அதிமுகவால் மட்டுமே காப்பாற்ற முடியும். 2024 நாடாளுமன்றத் தேர்தலை அனைவரும் ஒற்றுமையாக இருந்து சந்திப்போம்" எனத் தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com