2 ஆண்டுகளுக்குப் பிறகு மம்தாவை நேரில் சந்தித்துப் பேசிய சோனியாகாந்தி!

2 ஆண்டுகளுக்குப் பிறகு மம்தாவை நேரில் சந்தித்துப் பேசிய சோனியாகாந்தி!

பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சிக்கள் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்திருந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேரில் சந்தித்து உரையாடினார். ஒருவரை ஒருவர் உடல்நலம் விசாரித்ததுடன் பா.ஜ.க.வுக்கு எதிரான தேர்தல் உத்திகள் வகுப்பது பற்றியும் பேசியதாக கூறப்படுகிறது.

கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன் 2021 ஆம் ஆண்டில் ம்ம்தா பானர்ஜி, சோனியாவை தில்லியில் அவரது  இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.இரு தலைவர்களுக்கும் இடையே நல்லுறவு நிடித்து வரும் நிலையில் தில்லி மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மம்தாவை விமர்சித்து பேசிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்குவங்க முதல்வர் ம்ம்தா பானர்ஜி குறித்து காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளதுரி தெரிவித்த சில கருத்துக்கள் அவருக்க அதிருப்தியை ஏற்படுத்தியது. மேற்குவங்க மாநிலம், பெர்ஹாம்பூர் மக்களவைத் தொகு உறுப்பினரான ஆதிர் ரஞ்சன் செளதுரி, மம்தாவை ஒரு சர்வாதிகாரி என்றும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களை குண்டர்கள் என்றும் விமர்சித்து வந்த்தார்.

எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு ம்ம்தா பானர்ஜியும், சோனியா காந்தியும் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு வந்தனர். இருவரும் சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டனர். மம்தா பானர்ஜி, சோனியாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பதிலுக்கு சோனியாவும் சமீபத்தில் முழங்காலில் காயமடைந்த பானர்ஜியிடம் நலம் விசாரித்தார்.

இந்த கூட்டத்தில் சோனியா காந்திக்கு அடுத்த இருக்கையில் மம்தா பானர்ஜி அமர்ந்திருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த கூட்ட நிகழ்ச்சிகளின்போது இருவரும் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கான உத்திகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் ஒன்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதித்தாக தெரியவந்துள்ளது.இந்த கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற இரவு விருந்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் அபிஷேக் பானர்ஜி மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் இருவரும் விருந்தில் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் முக்கிய பங்காற்றும் என்று சொல்லப்படுகிறது. கடந்த முறை பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com