முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ! அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் இருக்குமா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழக அரசியல் சூழல் மற்றும் மக்கள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வருகிற 7-ந் தேதி 2-ம் ஆண்டை நிறைவு செய்து 3-ம் ஆண்டை தொடங்குகிறது. இந்த சூழலில் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப் பட உள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளும் வெளிநாடு பயணம், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், புதிய தொழில் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் ஒரு சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், இது குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சிறிது நிமிடங்கள் மட்டும் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com