கர்நாடகாவில் இடஒதுக்கீடு ரத்துக்கு தற்காலிக தடை!

கர்நாடகாவில் இடஒதுக்கீடு ரத்துக்கு தற்காலிக  தடை!

கர்நாடகாவில் 30 ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக கடந்த மாதம் பா.ஜ.க அரசு அறிவித்தது. இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்துக்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. மே 9-ம் தேதி வரை எந்தவொரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பையோ, பணிநியமன ஆணையோ பிறப்பிக்கக் கூடாது எனவும் அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ஒரே தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

வாக்குப்பதிவுக்குச் சரியாக இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தேர்தலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்த முயன்று வருகின்றன.

கடந்த ஆண்டு முதல் அங்கு இஸ்லாமியர்களைக் குறிவைத்து பா.ஜ.க நடத்தும் அரசியலில், 30 ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அறிவித்தது.

குறிப்பாக இந்த 4 சதவிகித இடஒதுக்கீடு தான் லிங்காயத், ஒக்கலிகா சமூகங்களுக்கு புதிய உட்பிரிவுகள் மூலம் தலா 2 சதவிகிதமாக வழங்க பா.ஜ.க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை அரசின் இத்தகைய முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது, 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை அமல்படுத்த தற்காலிமாக நிறுத்திவைப்பதாக அரசு அறிவித்தது.

அதன் ஒரு பகுதியாக கர்நாடக தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் இரு முக்கிய சமூகங்களான லிங்காயத் (90 தொகுதிகளில் பெரும்பான்மை) மற்றும் ஒக்கலிகா (80 தொகுதிகளில் பெரும்பான்மை) சமூகங்களுக்கு OBC சாதி பிரிவுகள் உருவாக்கப்படும் என்றும், ஒக்கலிகா சமூகத்துக்கு ‘2C’ எனவும், லிங்காயத் மக்களுக்கு ‘2D’ என்ற புதிய உட்பிரிவுகள் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடந்த விசாரணையில், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எந்தவொரு முடிவையும் மே 9-ம் தேதி வரை அரசு அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான மே 9-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதுமட்டுமல்லாமல், மே 9-ம் தேதி வரை எந்தவொரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பையோ, பணிநியமன ஆணையோ பிறப்பிக்கக் கூடாது எனவும் அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக அரசும் இதனை ஏற்றுக்கொண்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com