கல்விக் கொள்கை குழுவில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து முதல்வர் விசாரிக்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை!

கல்விக் கொள்கை குழுவில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து முதல்வர் விசாரிக்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை!

புதிய தேசிய கல்விக் கொள்கையை மறுத்து தமிழ் நாட்டிற்கென் தனியொரு கல்விக்கொள்கை அமைக்கப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் இருந்து அதன் ஒருங்கிணைப்பாளர் விலகியிருப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன் கேள்வி எழுப்புகிறார். இது குறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுததிருக்கிறார்.

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் அமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை குழுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஜவகர் நேசன் இரண்டு நாட்கள் முன்பு குழுவிலிருநது விலகிக்கொள்வதாக அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார். பல்வேறு தலையீடுகள் இருந்த காரணத்தால் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ள காரணம் பலரை ஆச்சர்யப்பட வைத்தது.

ஒருங்கிணைப்பாளரின் ராஜினாமா குறித்து விவாதம் எழாமல், ஒற்றை வரியில் ஊடகங்கள் கடந்து போயின. அமைச்சரவை மாற்றம், கர்நாடகா தேர்தல் என அடுத்தடுத்த தொடர்ந்த பிரேக்கிங் செய்திகளால் கல்விக்கொள்கை குழுவில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மக்களை சென்றடையாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மணிப்பூரில் நடைபெறும் கலவரம் குறித்தும், பின்னணியில் உள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் வரும் 15ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்தார். பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் தேசிய கல்விக்கொள்கை குழு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

திரு. ஜவஹர் நேசன் விலகுவதாக அறிவித்திருப்பதாகவும் அதற்கான காரணங்களாக அவர் முன்வைக்கும் விஷயங்கள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும். தேசிய கல்விக்கொள்கையோடு மாநிலத்தின் கல்விக்கொள்கை ஒருங்கிணைந்து செயல்படும் நிலை ஏற்படுவது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை தரும் என்றும் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதாகவும், தமிழ்நாட்டிற்கென மாநில அளவில் ஒரு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கப்போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

மாநில கல்விக் கொள்கை குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜவகர் நேசன் அறிவிக்கப்பட்டிருந்தார். இதில் கல்வியாளர்கள் தவிர விளையாட்டு வீரர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர் உள்ளிட்டவர்களும் உறுப்பினர்களாக

இருக்கிறார்கள். இந்நிலையில் முதல்வருக்கு நெருக்கமான செயலாளர்களின் தலையீடு அதிகமாக இருந்ததாகவும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றும் அதை செய்ய முடியவில்லை என்றும் பேசப்படுகிறது.

ஜவஹர் நேசன் முன்வைக்கும் காரணங்களை கல்விக்கொள்கையின் தலைவரான நீதிபதி முருகேன் மறுத்திருக்கிறார். கல்விக்கொள்கை சம்பந்தப்பட்ட குழுவில் கல்வியாளர்களின் பங்களிப்பை விட பிற துறையைச் சேர்ந்தவர்களின் பங்களிப்போ, தலையீடோ ஏன் இருக்கவேண்டும் என்கிற கேள்விக்கு தெளிவான விளக்கமில்லை. கல்விக்கொள்கை குழு ஒன்று கூடி பேசுவதற்கு அலுவலகம் கூட இல்லை என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com