மகளிருக்கான உரிமைத் தொகை குறித்து மூன்று மாதங்களில் அறிவிப்பு வெளியாகும்!

மகளிருக்கான உரிமைத் தொகை குறித்து மூன்று மாதங்களில் அறிவிப்பு வெளியாகும்!

மகளிருக்கான உரிமைத் தொகை குறித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அறிவிப்பு வெளியாகும் என இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கர்ப்பிணிகள், மாணவிகள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட 1,500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை புளியந்தோப்பு டான் பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. கால்பந்து மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்களும், மாணவிகளுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு தையல் எந்திரம், தூய்மைப் பணியாளர், திருநங்கையர், பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசியுடன் 12 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்களில் நம்பர் ஒன் அமைச்சராக சேகர்பாபு இருக்கிறார். சென்னையில் எங்கு பிரச்சனை என்றாலும் முதலில் சேகர்பாபுவை தான் தொடர்பு கொள்வேன். மேலும் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தொடர்பாக இரண்டு, மூன்று மாதங்களில் முதலமைச்சரிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும். நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆனைவரும் வெற்றியைத் தேடித்தர வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது அரசின் திட்டங்களால் பயன் அடைந்திருக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசு என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com