பி.டி.ஆர் பேசியதாக வெளியான ஊழல் ஆடியோ விவகாரம்! ஆளுநர் ரவியை சந்தித்த பாஜக நிர்வாகிகள் !

பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர்.

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஊழல் ஆடியோ வெளியாகி தமிழ் நாட்டில் பரபரப்பினை கிளறி வருகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த ஆடியோக்கள் சில தரப்பினர் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு விமர்சனத்திற்குள்ளும் உள்ளாக்கப்பட்டது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை முன்வைத்து கடும் விமர்சனங்களை வைத்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் வி.பி.துரைசாமி, கரு. நாகராஜன், பால் கனகராஜ், மாநில செயலாளர்கள் சதீஷ் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தனர்.

அவர்கள் இது குறித்து பேசியது.."ஆடியோவின் உண்மை தன்மையை தடயவியல் தணிக்கை செய்யக்கோரி அவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரு நாகராஜன், “30,000 கோடி ஒரே வருடத்தில் செலவழித்தது பற்றிய ஆடியோ தொடர்பாக, பாஜக சார்பில் ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். மேலும் சுதந்திர தடயவியல் தணிக்கை வேண்டும் என கேட்டுள்ளோம்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கேட்டால், நான் பேசிய ஆடியோ இல்லை என கூறியுள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்தோம். நாங்கள் குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். அவர்கள் குற்றவாளி இல்லை என நிரூபிக்க வேண்டும். தேவைப்பட்டால் மத்திய அரசிடம் மனு அளிப்போம்.

அமைச்சர் பேசிய உண்மையை கண்டறிய வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இந்த விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்துள்ளார். முதலமைச்சர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஆளுநரிடம் அதிகமாக மனு அளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நான் பேசியதாக வெளியான ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளர். மேலும் திமுகவிற்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் வெட்டி ஒட்டி சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் விளக்கம் அளித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com