திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் - வானதி சீனிவாசன் அழைப்பு!

திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் - வானதி சீனிவாசன் அழைப்பு!

சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வர வேண்டும் என பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். எந்த பட்டியல் இன பிரச்சனைக்கும் தீர்வு காண முடியவில்லை எனில் எதற்காக திருமாவளவன் அங்கு உள்ளார். திருமாவளவன் சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்கிறார் வானதி.

கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை நேற்று திறந்துவைத்த பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். கர்நாடக தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம். ஆட்சி அமைக்க முடியாததற்கான காரணத்தை கட்சி ஆராயும். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பை பூரணமாக நிறைவேற்றும் வகையில் கர்நாடக தேர்தல் முடிவு எங்களை தயார்படுத்துகிறது. தோல்விக்கு குறிப்பிட்ட காரணம் என்று எதையும் சொல்ல முடியாது.

திருமாவளவன்
திருமாவளவன்

திராவிட நிலப்பரப்பு என்பதை வார்த்தை அலங்காரத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்துகிறார். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். திமுக எத்தனை முறை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இரட்டை இலக்கம் கூட இல்லாமல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்துள்ளனர். பாஜகவின் வழக்கமான வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. கர்நாடகாவில் சி.டி. ரவி தோல்வியுற்றதால் தமிழ்நாட்டை வழி நடத்த முடியாது என சொல்ல முடியாது. அண்ணாமலை அவர் பங்களிப்பை மிக சிறப்பாக செய்துள்ளார். மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவுக்கு தான் மக்கள் வாய்ப்பளிப்பார்கள்.

இதுவரையிலும் திருமாவளவன் தான் இருக்கும் கூட்டணியில் பட்டியலின மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்பதை கடந்த 2 ஆண்டுகளாக பார்த்து வருகிறார். எனவே, திருமாவளவன் சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும். வாரிசு அரசியல், குடும்ப அரசியல்தான் திராவிட மாடல் என திமுகவினர் நிரூபித்து வருகின்றனர் என்று பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com