அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

இரண்டு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது! அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

மாண்டஸ் புயலுக்காக 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவ கல்லூரியில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். அப்போது மாண்டஸ் புயலை எதிர்கொள்வதற்கான மின்வாரியத்தின் சார்பில் எடுக்கபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

EB
EB

வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜீன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 44,000 பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் இரண்டு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளனர் . இரவு நேரப்பணிகள், பகல் நேரப்பணிகள் என தற்போது கூடுதலாக 11,000 களப்பணியாளர்கள் பணியமர்த்தபட்டுள்ளார்கள். வடகிழக்கு பருவமழையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டு சீரான மின்விநியோகம் வழங்கபட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிக்கிறார்களோ அந்த பகுதிகளில் கூடுதல் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மற்றும் உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன என அப்போது அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com