
ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தும் காந்தி ஜெயந்தி தினத்தன்று வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் திருமாவளவன் அறிவித்திருந்தார். மேலும் இதற்கு நாம் தமிழர் கட்சி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க கண்காணிக்க காவல்துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில், எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை அசோக்நகரில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தப் போது " தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு தடை விதித்திருப்பதை காரணம் காட்டி மனித சங்கிலிப் போராட்டத்துக்கும் அனுமதி மறுத்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை " என கருத்து தெரிவித்தார்.