வைரலான வாட்ஸ் அப் செய்தி - நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் vs தமிழக பா.ஜ.க - அடுத்து என்ன?
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 நொடிகள் கொண்ட ஆடியோ வெளியாகி கடந்த சில நாட்களாக வைரலாகியிருக்கிறது. இதுகுறித்து அமைச்சர் எந்த பதிலும் அளிக்காத நிலையில், நிதியமைச்சர் உடனே விளக்கம் அளிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களாக இணையவாசிகள் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும், முதல்வரின் மருமகனான சபரீசன் குறித்தும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசியது அவருடைய குரல்தான் என்று பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அது தன்னுடைய குரல் அல்ல என்று நிதியமைச்சர் மறுத்திருக்கிறார்.
இது குறித்து டிவிட்டரில் விளக்கமளித்துள்ள நிதியமைச்சர், என்னைப் பற்றி வந்த ஒரு சோஷியல் மீடியா பதிவு, பலரால் பகிர்ந்து கொள்ளப்படுவதால் அது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டியிருக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகத்துறையில் இதுபோன்ற போலி செய்திகள் பரவி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றவர், தன்னுடைய குரல் பதிவாக வந்தவற்றை ஆய்வு செய்து, அது போலி என்று நிரூபித்திருப்பதாக தெரிவித்தார்.
சர்ச்சையை ஏற்படுத்திய அந்த 26 நொடி ஆடியோ பல்வேறு ஆடியோக்களை கட் செய்து ஒட்டியது என்றும் 'தி கிரேட் எஸ்கேப்' என்ற படத்தின் சிறிய வீடியோவில் தான் காட்டியிருப்பது போல் கச்சிதமாக எடிட் செய்திருக்கிறார் என்றும் விளக்கமளித்தவர், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுவிடங்களில் என்னை வில்லனாக சித்தரித்து தோற்றுப்போனவர்கள், என்னை துரோகியாகவும் காட்டிக் கொடுப்பவராகவும் சித்தரிக்க முயற்சி செய்து வருகிறார்கள். பொதுவாழ்வில் நான் உயர்ந்திருப்பதற்கு தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அவர்கள்தான் காரணம். எங்களை யாராலும் பிரித்துவிட முடியாது.
சர்ச்சை நாயகனான நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் என்னதான் பேசினார் என்பதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய டாக். நிதியமைச்சர் பேசியதற்கும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும் தி.மு.க ஆட்சியில் நிதியமைச்சராக உள்ள ஒருவர், அரசுக்கு எதிராக பேசிவிட்டார் என்று தி.மு.கவினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடுமையான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு விதிப்பதால், மாநில அரசுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாநில அரசுகளின் உரிமை பறிபோவதாக நாங்கள் புதிதாக பேசவில்லை. அன்று குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியும், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தனர் என்று சமீபத்தில் பட்.ஜட் உரையின்போது பேசியிருந்தார்.
இதுதான் பா.ஜ.கவினரை நிதியமைச்சராக களமிறங்க வைத்திருக்கிறது. வாட்ஸ் அப் செய்தி குறித்து அ.தி.மு.கவினர் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால்,
பா.ஜ.கவினரோ ஆடியோவின் உண்மை தன்மையை தடயவியல் தணிக்கை செய்ய உத்தரவிடுமாறு ஆளுநரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஒரு நிதியமைச்சர் ஆப் த ரெக்கார்டாக பேசியதை வைத்து, ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது சரிவர தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.