V.K.சசிகலா அவர்களின் அதிரடி திட்டம்...........?

Eps  Ops
Eps Ops

அ.தி.மு.க.வை கைப்பற்றுவதே தனது நோக்கம் என்று சசிகலா அம்மையார் கூறிவருகிறார். எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல செயல்பட்டுக் கொண்டிருகிறார். என்றாலும் அ.தி.மு.க.வில் அவருக்கு பயங்கர எதிர்ப்பு தொடர்கிறது. இந்த நிலையில், திருமதி சசிகலா அவர்கள், அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளின் தலைவர்களான, EPS மற்றும் OPS அவர்களை சந்திக்கப் போவதாகக் கூறி, அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

நேற்று(17-01-2023) அ.தி.மு.க.வின் முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கட்சியின் நிறுவனருமான, எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள், இன்று அ.தி.மு.க. வினராலும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் அபிமானிகளாலும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. திருமதி சசிகலா அவர்கள் தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில்,ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர். பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த பிறகு,' ஆளுநர் விவகாரத்தில் தி.மு.க. சரியாக செயல்படவில்லை. ஆளுநருக்கும், அரசுக்கும் நல்லுறவு இருந்தால்தான் ஓட்டுப் போட்ட மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த முடியும். ஆளுநரை எப்படி நடத்தவேண்டுமென வழிமுறைகள் இருக்கிறது. அதன்படியே தமிழக அரசு நடந்துக் கொள்ள வேண்டும்'. எனக் கூறினார்.

மேலும் அவர் தொடர்ந்த போது, 'மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சொன்னதைத்தான் செய்வார். ஒருபோதும் மக்களை ஏமாற்றியதில்லை. தி.மு.க.அரசு சிறப்பாக செயல்படவில்லை. எனவே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், அனைவரும் ஒன்றினைந்து தி.மு.கவை தோற்கடித்து வெற்றிப் பெற்று, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பிப்போம். எனவே இது தொடர்பாக, EPS, OPS ஆகிய இருவரையும் சந்தித்து பேசுவேன். எனதுக் கட்சிக்காரர்களை சந்திப்பதில் எனக்கென்ன பயம்?' என்று கூறி முடித்தார்.

இந்த முடிவு அரசியல் மாற்றங்களைக் கொடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என, அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com