நாளை கர்நாடக சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை!

நாளை கர்நாடக சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை!

கர்நாடக சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 10 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு 2023 அட்டவணை: கர்நாடக சட்டசபையின் 224 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் www.eci.gov.inwww.eciresults.nic.in, போன்ற இணையதளங்களில் பார்க்கலாம்.

வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நாள் முதல் பல்வேறு செய்தி நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகளும் சொல்லப் பட்டாலும், எந்த கட்சியும் தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற முடிவுகள் நாளை தெரிந்து விடும்.

.கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி சார்பில் 209 வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர். மேலும் சுயேட்சை வேட்பாளர்களாக 918 பேர் களத்தில் மோதுகின்றனர். தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றே பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டு வருகிறது.

கர்நாடகம் முழுவதும் 58,545 வாக்குச் சாவடிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. வாக்குப்பதிவு செய்யப்பட்ட 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முத்திரையிடப்பட்டு 34 வாக்குப்பெட்டி மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் 24 மணி நேர ஆயுத பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com