சொல்லாத வார்த்தைக்கு ராகுல் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? சசி தரூர்!

சொல்லாத வார்த்தைக்கு ராகுல் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? சசி தரூர்!

சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ராகுல்காந்தி எம்.பி. இந்திய ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

ராகுல்காந்தி. இந்திய ஜனநாயகத்தையும், நாடாளுமன்றத்தையும் இழிவுபடுத்திவிட்டதாக பா.ஜ.க.வின் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூர், இந்திய ஜனநாயகத்தை விமர்சித்து ராகுல் கருத்து கூறியிருந்தாலும், வெளிநாட்டினர் இதில் தலையிட வேண்டும் என்று ஒருபோதும் பேசவில்லை. மேலும் அவரது கருத்துக்கள் தேசவிரோதமாக கருதமுடியாது என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தியின் லண்டன் பேச்சால் எழுந்துள்ள புதிய சர்ச்சை காரணமாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டமாக நாடாளுமன்றம் தொடங்கிய நாளிலிருந்து தொடர்ந்து ஐந்து நாட்களாக அமளியால் செயல்படாமல் முடங்கியது.

இந்தியா டுடே இதழ் சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்ற சசி தரூர் பேசுகையில், நாடு எவ்வளவோ பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் இதைப்பற்றித்தான் நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டுமா?

மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ராகுல் எதையும் பேசியதாகத் தெரியவில்லை. பா.ஜ.க.வினர் அரசியலில் காய் நகர்த்துவதில் வல்லவர்கள். ராகுல் சொல்லாத வார்த்தைக்காக அவர் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள். அதையே தொடர்ந்து வலியுறுத்தி சொல்லாத வார்த்தைக்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். இது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.

இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்று ராகுல் ஒருபோதும் பேசியதாகத் தெரியவில்லை.

வெளிநாட்டில் உள்நாட்டு அரசியல் பற்றி பேசியதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. கூறினால், முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டியது பிரதமர் நரேந்திர மோடிதான் என்றார் தரூர்.

பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போதெல்லாம், இந்தியாவில் கடந்த 65 ஆண்டுகளாக எந்த நல்லதும் நடக்கவில்லை. தாம் ஆட்சிக்கு வருவதற்கு முன் இந்தியர்கள் வெளிநாட்டில் தலைகாட்ட முடியவில்லை என்று பேசியுள்ளார்.

பிரதமர் மோடி, தனது பேச்சுக்காக மன்னிப்புக் கேட்டால், மற்றவர்களும் வெளிநாட்டில் தங்கள் பேச்சுக்காக மன்னிப்பு கேட்பார்கள் என்றார் தரூர்.

வெளிநாட்டில் போய் இதை ஏன் பேசவேண்டும். பேசுவதற்கு வேறு விஷயம் இல்லையா என்று கேட்கலாம். ஆனால், ஜனநாயக நாட்டில் ஒருவருக்கு தனது கருத்துக்களை வெளியிட உரிமையுள்ளது. அதை எங்கு பேசவேண்டுமோ அங்கு பேசலாம். நான் தனிப்பட்ட யாருக்காகவும் (ராகுல் காந்திக்காக) வக்காலத்து வாங்கவில்லை என்றார் ச்சிதரூர்.

லண்டனில் ஒருகூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி. இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல் நடக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே பேச அனுமதிக்கப்பட்டாலும் மைக்குகள் அணைக்கப்படுகின்றன என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர். பிரதமர் மோடியும் வெளிநாட்டில் இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். அவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸாரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com