நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: மம்தா பானர்ஜி!

நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: மம்தா பானர்ஜி!

நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று மேற்குவங்க முதல்வர் ம்ம்தா பானர்ஜி உறுதிபடக் கூறினார். வெறுப்பு அரசியலை கடைப்பிடிப்பதன் மூலம் சிலர் நாட்டை பிளவுபடுத்த முயல்கின்றனர். ஆனால், உயிரைக் கொடுத்தேனும் அதைத் தடுப்பேன். நாட்டை துண்டாட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றார் அவர்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். கலவரங்களை நாங்கள் விரும்பவில்லை ஆனால், சிலர் வெறுப்பு அரசியலை நடத்துவதன் மூலம் நாட்டை பிளவுபடுத்த நினைக்கின்றனர். அவர்களது முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது. நாட்டை பாதுகாக்க உயிரையும் கொடுப்பேன். ஒரு போதும் நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன். பணபலம், அதிகார பலம் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு எதிராக போராட நான் தயாராக இருக்கிறேன். ஆனால், ஒருபோதும் அவர்களுக்கு அடிபணியமாட்டேன்.

ஒரு சிலர் பா.ஜ.க.விடம் பணத்தை பெற்றுக்கொண்டு மேற்குவங்கத்தில் முஸ்லிம் வாக்குகளை பிரிக்க நினைக்கிறார்கள். பா.ஜ.க.வுக்காக யாராலும் முஸ்லிம் வாக்குகளை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது.

அடுத்த ஆண்டு நாட்டை யார் ஆளவேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை பிளவுபடுத்தும் சக்திக்கு எதிராக போராட உறுதி ஏற்க வேண்டும். வரும் தேர்தலில் பிரிவினை சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராக வேண்டும். ஜனநாயகத்தை காக்கத் தவறினால் நாம் அனைத்தையும் இழந்துவிடுவோம் என்றார் ம்ம்தா பானர்ஜி.

முதல்வர் பானர்ஜி யாரையும் பெயர் குறிப்பிடாமல் பேசியபோதிலும் மறைமுகமாக அவர் பா.ஜ.க. மற்றும் அசாவுத்தீன் ஓவைசியை சாடினார். ஒவைசி பா.ஜ.க.விடம் பணம் பெற்றுக்கொண்டு முஸ்லிம் வாக்குகளை பிரிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com