எம்.எல்.ஏ.க்களை திருடர்கள் என்று விமர்சித்த சஞ்சய் ராவத் - சிறைக்கு அனுப்பப்படுவாரா?

எம்.எல்.ஏ.க்களை திருடர்கள் என்று விமர்சித்த சஞ்சய் ராவத் - சிறைக்கு அனுப்பப்படுவாரா?

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினர்களை திருடர்கள் என்று விமர்சித்த உத்தவ் தாக்கரே ஆதரவாளரான சஞ்சய் ராவத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். இது குறித்து உரிமை மீறல் தீர்மானமும் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

நேற்று கூடிய சட்டமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. பணவீக்கம், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டார்கள். அதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களை சிவசேனா (உத்தவ் தாக்கரே) அணியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், தவறாக விமர்சித்தது குறித்தும் பேசப்பட்டது.

சஞ்சய் ராவத்தின் விமர்சனம், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு மட்டுமல்ல. ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்துவதாகும். இதே சட்டமன்றத்தில் சஞ்சாய் ராவத்தின் தலைவரான உத்தவ் தாக்கரேவும் உறுப்பினராக உள்ளார். தன்னுடைய ஆதரவாளரை கண்டித்து பேசவேண்டும என்று கோரிக்கை விடுத்தார்.

ஆட்சி பறிபோன நாள் தொடங்கி, தன்னிலை மறந்தவராக உத்தவ் தாக்கரே தொடர்ந்து பேசிவருகிறார். மகராஷ்டிராவை திருடர்களிடமிருந்து மீட்போம் என்று சென்ற வாரம் பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் சட்டமன்ற உறுப்பினர்களை திருடர்கள் என்று சஞ்சய் ராவத் பேசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சஞ்சய் ராவத், தன்னுடைய பேச்சு பற்றி விளக்கமளிக்குமாறு சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நர்வேகர் உத்தரவிட்டிருக்கிறார். இது மகராஷ்டிரா மக்களுக்கு ஏற்பட்டு அவமதிப்பு. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தன்னுடைய அடுத்த கட்ட முடிவையும் அறிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்திருக்கிறார்.

இது போன்ற சூழல், தமிழகத்திலும் ஏற்பட்டிருக்கிறது. எம்.ஜிஆர் ஆடசியின்போது ஆனந்த விகடன் இதழியில் வெளியான அட்டைப்படத்தில் எம்.எல்ஏக்களை திருடர்களாகவும் ரவுடிகளாகவும் கிண்டலடித்திருந்தார்கள். இதை கண்டித்து சட்டமன்ற சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன் ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியனுக்கு சம்மன் அனுப்பினார்.

சட்டமன்றத்திற்கு வரவழைக்கப்பட்ட ஆனந்த விகடனின் ஆசிரியரை மன்னிப்பு கேட்டுமாறு உத்தரவிட்டார். அதற்கு அவர் மறுக்கவே, 3 மாதம் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இது நாடு முழுவதும் பெரிய பரபரப்பை கிளப்பியது.

சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதி மன்றம் அனுப்பி சம்மனை பெற்றுக்கொள்ள மறுத்த சபாநாயகர், தனக்கு நீதிமன்றத்தை விட வானாளாவிய அதிகாரம் இருப்பதாக குறிப்பிட்டார்.

35 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. மகராஷ்டிரா சபாநாயகர், தமிழ்நாட்டின் சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியனை பின்பற்றுவரா என்பது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com