கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு !

கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு !

கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில்‌ சி.சி.டி.வி. கேமராக்கள்‌ பொருத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி கர்நாடகாவில் மொத்தம் 65% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

அதனை தொடர்ந்து 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

மொத்தம் 2615 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

Election
Election

கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர்.

இந்த வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com