பொங்கல் பரிசு 1000/- ரூபாயை எந்த ரேஷன் கடையிலும் வாங்கலாமா?

பொங்கல் பரிசு  1000/- ரூபாயை எந்த ரேஷன் கடையிலும் வாங்கலாமா?

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் அடிப்படையில் பொங்கல் பரிசு ரூ.1000 எந்த ரேஷன் கடையிலும் வாங்க முடியுமா? என்று பொதுமக்கள் பலர் சந்தேகம் கேட்டு வருகின்றனர்.

பொங்கலை முன்னிட்டு பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளதால் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றபின் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்த கேள்விக்கு உணவுத்துறை அதிகாரிகள் தற்போது தெளிவாக பதிலளித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கடந்த 2020 அக்டோபரில் இணைந்தது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைவரும் எந்த ரேஷனிலும் பொருட்கள் வாங்கி பயனடையலாம். தமிழகத்திலும் மாநிலம் முழுவதும் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் முகவரி மாறி சென்றாலும் கார்டில் முகவரி மாற்றம் செய்யாமலேயே தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும்.

cash
cash

இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 09 ஆம் தேதி முதலமைச்சரால் தொடங்கப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் ரூ.1000 ரொக்கத்தை எந்த ரேஷன் கடையிலும் பெற முடியுமா? என்று பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பை எந்த ரேஷன் கடையிலும் பெற்று கொள்ள அனுமதி அளித்தால் அதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அந்தந்த ரேஷன் கார்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பை பெற முடியும்.

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கனை பெற்று கொண்டு அதற்கான நாளில் வந்து பரிசு தொகுப்பினை பொது மக்கள் பெற்று கொள்ளலாம்.

இதில் ஏதும் முறைகேடுகள் நடந்தால் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய எண்களிலும் தெரிவிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com