பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம் ! தமிழக அரசு முடிவு!

பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம் ! தமிழக அரசு  முடிவு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு அதனை முன்னிட்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் தமிழக அரசால் வினியோகிக்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களே முழு பொறுப்பு என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

பொங்கல் தொகுப்பு பரிசு
பொங்கல் தொகுப்பு பரிசு
  • இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன.

  • பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

  • மற்ற மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள் .

  • இந்த பொங்கல் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

  • தமிழகம் முழுவதும் மொத்தம் 33000 ரேஷன் கடைகள் உள்ளது

  • அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

  • கூட்டுறவு துறை உதவியுடன் இந்த டோக்கன் வழங்கும் பணி நடைபெறவுள்ளது.

  • டோக்கனில் பொங்கல் தொகுப்பை பெறும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

  • இதனைக் காட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் குடும்ப ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

  • டோக்கன்கள் இன்று முதல் 8-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன.

  • 6-ம் தேதி விடுமுறை என்பதால் அன்று டோக்கன் வழங்கப்படாது.

  • ஒரு நாளுக்கு 240 டோக்கன்களை அலுவலர்கள் வீடு வீடாக வந்து வழங்குவார்கள்.

  • இன்று காலை 8.00 மணி முதல் இந்த டோக்கன் வழங்கும் பணி நடைபெறவுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com