#JUST IN : பொங்கல் பரிசு தொகுப்பு நாளையும் வழங்கப்படும்..!

Pongal Gift Pack 2026
Pongal Gift Pack
Published on

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ₹3,000 ரொக்கத்துடன் கூடிய சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். நியாயவிலைக் கடைகள் மூலம் இந்தப் பரிசுகளை வசதியாகப் பெற்றுக்கொள்ள அரசு ஏற்பாடு செய்தது.

தமிழ்நாடு அரசு 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன், 4.1.2026 முதல் 7.1.2026 வரை ரேஷன் கடை பணியாளர்களால் வழங்கப்பட்டது.நேற்று வரை 24,924 ரேஷன் கடைகளில் உள்ள 2,4 10,899 அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகையாக ரூ.6,123.26 கோடி வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் (புதன்கிழமை) வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசு விருது அறிவிப்பு : அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது..!
Pongal Gift Pack 2026

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com