சர்க்கரை கார்டுகளுக்கு பொங்கல் பரிசு உண்டா?

சர்க்கரை கார்டுகளுக்கு பொங்கல் பரிசு உண்டா?

தமிழக அரசு பொது மக்களின் விருப்பத்தின்படி, ரேஷன் கார்டுகள் வழங்குகிறது. ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு, அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களும் வழங்கப்படுகின்றன.

பொங்கல் பரிசு தொகுப்பு, பேரிடர் கால நிவாரண தொகை என இலவசத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள், சர்க்கரை கார்டுதாரர்களுக்கு கிடைப்பதில்லை.

வசதியாக இருந்த போது, சர்க்கரை கார்டுகள் வாங்கியவர்களில் பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்றது உள்ளிட்ட காரணங்களால் ஏழ்மை நிலையில் உள்ளனர்.

அ.தி.மு.க., ஆட்சியிபோது ஜனவரியில் வழங்கப்படும் பொங்கல் பரிசை வாங்குவதற்காக சர்க்கரை கார்டுதாரர்கள் தங்களின் கார்டை அரிசி கார்டுதாரர்களாக மாற்றிக் கொள்ள ஆண்டு இறுதியில் அவகாசம் அளிக்கப்பட்டது.

தற்போது 3.83 லட்சம் சர்க்கரை கார்டுகள் உள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, ஜனவரியில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்காக அரிசி கார்டுக்கு மாற வாய்ப்பு அளிக்கு மாறு சர்க்கரை கார்டுதாரகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com