#BREAKING : புதுச்சேரியில் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு அறிவிப்பு..!

PONGAL GIFT
PONGAL GIFTSource:dailythanthi
Published on

புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும். இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருட்கள் கொடுக்க புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது.

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதில் அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு, சர்க்கரை, நெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இந்த பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com