பொன்னியின் செல்வன் காலண்டர் 2023!

Suhasini manirathnam
Suhasini manirathnam

பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்களை வைத்து பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட காலண்டர் வரும் 2023 ஜனவரி 4 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியினை சுஹாசினி மணிரத்தினம் தனது டிவிட்டர் பக்கத்திலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த பொன்னியின் செல்வன் காலண்டரை "நாம்" தொண்டு நிறுவனம் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன் , வந்திய தேவன் , அருள் மொழி வர்மன், நந்தினி , குந்தவை , பூங்குழலி, மதுராந்தகன், செம்பியன்மாதேவி , பெரிய பழுவேட்டரையர் சின்ன பழுவேட்டரையர், பார்த்திபேந்திரன் ஆகிய கேரக்டர்களை வைத்து இந்த 2023 வருடத்திற்கான காலண்டர் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான விழா வரும் ஜனவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை நாம் தொண்டு நிறுவனம் மிக சிறப்பாக வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com